நிறப்பிரிகை முறைகளிலேயே மிகவும் எளிய, பரவலாகப் பயன்படுத்தப்படும் முறை தாள் நிறப்பிரிகை வடிதாளிலுள்ள செல்லுலோஸ் தாங்கும் ஊடகமாய் (supporting medium) செயல்படுகிறது.
வடிதாளில் எண்ணற்ற செல்லுலோஸ் இழைகள் உள்ளன. இந்த இழைகள் குறிப்பிட்ட அளவு நீரை உறிஞ்சி நிலைநிறுத்திக் கொள்ளுகின்றன.
இவ்வாறு செல்லுலோஸ் இழைகளில் நிலைநிறுத்தப்பட்ட நீரே நிலைப்படியாக உள்ளது. காகித நிறப்பிரிகையில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட வடிதாள்கள் பயன்படுத்தப்படுகின்றன.
.நுண்புழைவிசை (capillary force) ஒரு கரைசல் ஒரு வடிதாளின் வழியாகச் செல்லும் போது வெவ்வேறு கூறுகள் வெவ்வேறு நகர்வு வேகங்களைப் பெற்றுள்ளன என்ற தத்துவத்தை தாள் நிறப்பிரிகை அடிப்படையாகக் கொண்டதாகும்.
RJ மதிப்பு
தாள் நிறப்பிரிகையில் R என்ற தொடர் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. R. மதிப்பு கரைபொருள், கரைப்பான் ஆகியவற்றின் ஒப்பு வேகங்களைக் குறிப்பிடுகிறது.
